"Amma Kanakku" Movie | REVIEW :-


Review

அம்மா கணக்கு : 
சமுத்திரக்கனி, அமலாபால்,ரேவதி ஆகியோர் நடித்து, இசைஞானி இளையராஜா இசையில், அஷ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் மற்றும் ஆனந்த் L ராய், தனுஷ் தயாரிப்பில் இன்று(24/06/2016) வெளிவந்துள்ள அம்மா கணக்கு திரைவிமர்சனம். 


மிகவும் கஷ்டபடுகிற ஒரு விதவை தாய் தான் மகளை எப்படி வளர்க்கிறார் என்றும் அவளை நல்ல முறையில் வளர்க்க எப்படியெலாம் பாடுபடுகிறாள் என்பதை படத்தின் கருவாக வைத்து எடுத்திருக்கிறார் இயக்குனர் அஷ்வினி ஐயர் திவாரி. வீட்டுவேலை செய்தும், சலவை வேலை செய்தும், மீன் பதப்படுத்துகிற ஒரு சிறிய ஆலையிலும் வேலை செய்து தன் மகளை படிக்கவைக்கிறாள் ஆனால் தன் அம்மா இவ்வளவு கஷ்டப்படுகிறாள் என்று கூட தெரியாமல் அமலாபால் மகள் படிப்பில் அவ்வளவாக கவனம் இல்லாமல் இருக்கிறாள் என்பதனால் மிகுந்த வேதனைப்படும் அமலாபால். 


இதன்பின் அவள் வேலை பார்க்கும் மருத்துவர்(ரேவதி) வீட்டில் அவள் ஆலோசனையின் பெயரில் அமலாபாலும் தன் மகள் பள்ளியில் 10ம் வகுப்பு சேருகிறாள் இது அமலாபால் மகளுக்கு பிக்கவில்லை இதை ஒருநாள் தன் ஆம்மாவிடம் கூறுகிறாள் மகள். அப்போது அமலாபால் மகளிடம் ஒரு கண்டிஷன் வைக்கிறாள் தான் பள்ளிக்கு வருவதை நிறுத்த வேண்டும் என்றால் நீ அரையாண்டு தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவேண்டும் என்கிறாள் இதற்கு ஒப்புக்கொள்கிறாள் மகள். 

படத்தில் சமுத்திரக்கனி பள்ளியின் தலைமையாசிரியராய் ஒரு கணக்கு வாத்தியாரை வருகிறார் அவர் தனக்கு கொடுத்த பாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார். படத்தின் இறுதியில் மகள் நன்றாக படித்து அம்மா நினைத்தவாறு நடந்துகொள்கிறாளா. அமலாபால் பள்ளிக்கு செல்வதை நிறுத்துவாரா என்பதை அழகாக எடுத்து சொல்கிறார் இயக்குனர்.

இப்படத்தின் மூலம் அமலாபால் தன் நடிப்பின் முழுத்திறமையையும் காட்டியிருக்கிறார். நடிப்பு என்பதை காட்டிலும் ஒரு ஏழை விதவையை பெண்ணாய் வாழ்ந்து இருக்கிறார் என்றே கூறலாம்.


Click here to get more : Amma Kanakku Tamil movie trailer and review, Starrer at Samuthirakani,Amala Paul,Revathi, Film hosted by Ashwini Iyer Tiwari, Music by Ilaiyaraaja