மனித மிருங்களின் வேட்டை இன்னும் எத்தனை பிஞ்சு குழந்தைகளை சீரழிக்க போகிறது???? இந்த நிலை எப்போது மாறும்????
காஷ்மீரில் கத்துவா பகுதியை சேர்ந்த ஆசிபா என்ற எட்டு வயது சிறுமி ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டு இருக்கிறார்.இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் இந்த செய்தி வெளிவருகிறது. இதன் பின்னணியில் மத பிரச்னை உள்ளது என கூறப்படுகிறது.அந்த சிறுமி கொல்லப்பட்டதை விட , அரசியல் கட்சியினரின்ஈடுபட்டு அந்த இந்துத்துவா மிருகங்களை காப்பற்ற முயல்கின்றார் என்பது மிக மிக வேதனைக்குரிய விஷயம்
முகமது யூசுப் புஜ்வாலா நசீமா பிபி இவர்களுடைய மகள் தான் ஆசிபா. கத்துவா பகுதியில் வசித்து வரும் குஜ்ஜார் என்னும் முஸ்லீம் இனத்தை சேர்ந்தவர்கள். குஜ்ஜார் இனத்தை சேர்ந்தவர்கள் ஆடு மாடு மேய்ப்பவர்கள். எட்டு வயது சிறுமி குதிரை மேய்த்து கொண்டு வரும் போதுதான் அந்த கும்பலால் கடத்தப்பட்டு உள்ளார். நாம்அனைவரும் புனிதமான இடமாக கருதும் கோவிலில் வைத்து தான் கற்பழித்து உள்ளனர். இதை கேட்கும் போது கடவுள் உள்ளாரா என ஒரு நிமிடம் நாம் அனைவரும் யோசிக்கத்தான் செய்வோம்.
பாதுகாப்பிற்காக வந்த காவல்துறை அதிகாரியும் இதற்கு உடன் போனது தான் இந்த வழக்கின் உச்சகட்டகொடுமையான விஷயம். நீதிக்கு கேட்டு செல்லும் இடத்தில உள்ள போலீஸ் இவ்வாறு நடந்து கொண்டால் என்ன நியாயம்???? சிறுமியின் சிரிப்பில் இவர்களுக்கு எப்படி காமம் தெரிஞ்சதோ, என்று தெரியவில்லை. இந்த வழக்கை தீபிகா சிங் ராஜவாட்(Deepika Singh Rajawat) எடுத்து விசாரித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு தொடர்ந்து மர்மநபர்களால் மிரட்டல் வந்தவண்ணம் உள்ளது.
இதனால் அதிர்ந்து போன ராஜவாட் தான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்,கற்பழிக்கப்படலாம் அல்லது என் குடுப்பத்தாருக்கு எப்படி வேண்டுமானாலும் ஆபத்துவரலாம் என்று அச்சப்படுகிறார். இதனால் தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் இந்த வழக்கு முடியும் வரை பாதுகாப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
ஹாசினி, நிர்பயாவையை தொடர்ந்து தற்போது ஆசிபாவுக்கு இந்த கொடூரம் நடந்து உள்ளது……….. வாழ வேண்டிய அந்த பிஞ்சு குழந்தையை சீரழித்த அந்த மனித மிருகங்களுக்கு மிகவும் கொடூரத்தனமான தண்டனை தான் கொடுக்க வேண்டும்.ஏனென்றால் அப்போது தான் இந்த மாதிரி குற்றங்கள் குறையும். மனித மிருகங்களும் திருந்துவார்கள். ஹாசினி, நிர்பயா தற்போது ஆசிபா இதுவே முடிவாக இருக்கட்டும்……. இனி இந்த கொடூரம் யாருக்கு நிகழக்கூடாது. ஆசிபாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்.#justice for asifa
Post a Comment
Post a Comment